கியூரி பால்கேர் சேவை அறிமுகம்

சென்னை; தீவிர நோய் மற்றும் நீண்டநாள் நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பரிவுடன் முழுமையான ஆதரவு வழங்கும் நோக்கில் CURI Palcare என்ற பாலியேட்டிவ் கேர் சேவையை சென்னை CURI மருத்துவமனை துவக்கியுள்ளது .



இந்த நிகழ்ச்சி மயக்கவியல், வலி மற்றும் தீவிர சிகிச்சை துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்வில் பேசிய டாக்டர் சிவபாலகுமாரன், சிகிச்சையைத் தாண்டியும் நோயாளிகளுக்கு மனஆதரவு மற்றும் அக்கறையுடன் கூடிய பராமரிப்பு அவசியம் என கூறினார்.

டாக்டர் நவீன், பாலியேட்டிவ் கேர் என்பது நோயாளிகளின் வலியை குறைத்தல், நோயின் அறிகுறிகளுக்கு நிவாரணம் அளித்தல், மனஆதரவு வழங்குதல் மற்றும் நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவும் முக்கிய சேவை என விளக்கினார்.


பாலியேட்டிவ் கேர் பிரிவு தலைவர் டாக்டர் அவிநாஷ் CURI Palcare உருவாக்கப்பட்டதன் நோக்கம் குறித்து பேசினார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட டாக்டர் மல்லிகா திருவதனன், கடுமையான நோய்களை எதிர்கொள்ளும் நோயாளிகளுக்கு ஆரம்பத்திலேயே பாலியேட்டிவ் கேர் சேவையை வழங்குவது மிகவும் முக்கியம் என வலியுறுத்தினார்.


CURI மருத்துவமனை இயக்குநர் டாக்டர் அனந்தகிருஷ்ணன் சிவராமன் பேசுகையில், “அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ சிகிச்சைகளைத் தாண்டியும் நோயாளிகளுக்கு தொடர்ச்சியான ஆதரவு, வலி நிவாரணம் மற்றும் மனஆதரவு தேவைப்படுகிறது. அதற்காகவே CURI Palcare தொடங்கப்பட்டுள்ளது,” என்றார்.

Advertisement