6 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த மின்தடையால் அவதி

இளையான்குடி:இளையான்குடியில் (மே 18) 6 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த மின்தடையால் பொதுமக்கள் சிரமப்பட்டனர்.

இளையான்குடியில் சில வாரங்களாக அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. சிறிய மழை பெய்தாலோ அல்லது காற்று அடித்தாலோ நீண்ட நேரம் மின்தடை ஏற்படுகிறது.நேற்று இளையான்குடி பகுதியில் மழை பெய்த நிலையில் மாலை 6:00 மணிக்கு ஏற்பட்ட மின்தடை இரவு 12:00 மணி வரை நீடித்ததால் பொதுமக்கள் துாங்க முடியாமல்அவதிப்பட்டனர். மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.

மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: பரமக்குடியில் இருந்து இளையான்குடி வழியாக மறவமங்கலம் செல்லும் உயர் மின் கோபுர மின் வழிப்பாதையில் மின்னல் தாக்கியதில் பழுது ஏற்பட்டதால் நீண்ட நேரம் மின்தடை ஏற்பட்டது. இனிவரும் காலங்களில் மின்தடை ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.

Advertisement