கூவர்கூட்டம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் நிறைவேற்ற கோரி மக்கள் மனு
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே கூவர்கூட்டம் கிராமத்தில் குடிநீர், ரோடு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி கிராம மக்கள் கடலாடி ஒன்றிய அதிகாரியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
முதுகுளத்துார் அருகே கூவர்கூட்டம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். கிராமத்திற்கு குடிநீர் வசதி இல்லாமல் மக்கள் சிரமப்படுகின்றனர்.ரோடு வசதி இல்லாமல் நடப்பதற்கு மக்கள் சிரமப்படுகின்றனர். டிராக்டர் தண்ணீரை விலைக்கு வாங்குவதற்கு கூட நாள் முழுவதும் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் அத்தியாவசிய வேலைக்கும் செல்ல முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே கூவர்கூட்டம் கிராமத்திற்கு குடிநீர், ரோடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்ற வலியுறுத்தி கிராம மக்கள் கடலாடி ஒன்றிய அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். மக்கள் கூறியதாவது:
கூவர்கூட்டம் கிராமத்தில் குடிநீர், ரோடு உள்ள அடிப்படை வசதி இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றோம். இதனால் சிலர் கிராமத்தை காலி செய்து நகர பகுதிக்கு சென்று வருகின்றனர். எனவே மக்களின் நலன் கருதி அடிப்படை வசதிகளை நிறைவேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
மேலும்
-
பெட்ரோல், டீசல் விற்பனையில் எந்தவித கட்டுப்பாடும் விதிக்கவில்லை; இந்தியன் ஆயில் நிறுவனம் .
-
கார்களின் விலையை ரூ.30 ஆயிரம் உயர்த்துகிறது மாருதி சுசூகி
-
தமிழகத்தில் தகதகக்கும் வெயில்; 16 இடங்களில் அடித்தது சதம்
-
குரு பெயர்ச்சி ஜப ஹோமம்
-
பாதுகாப்பு உபகரணம் இல்லாமல் பணயில் ஈடுபட்ட மின்ஊழியர்கள்
-
பொது பாதை தொடர்பாக தகராறு 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு