தவெக அமைச்சரவையில் இடம்பெறும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் யார்?

3

சென்னை: காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் ராஜேஷ்குமார், விஸ்வநாதன் ஆகியோர் விஜய் அமைச்சரவையில் இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக விஜய் பொறுப்பேற்றுக் கொண்டார். தனது வாக்குறுதி படி தேர்தலுக்கு பிறகு கூட்டணியில் இணைந்த காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் இரண்ட இடங்களை விஜய் வழங்க உள்ளார். இதனை அண்மையில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் உறுதிபடுத்தினார்.

தற்போது உள்ள 5 எம்எல்ஏக்களில் இருவரை அமைச்சர்களாக தேர்வு செய்வது குறித்து தவெக தலைமை மற்றும் காங்கிரஸ் மேலிடம் ஆலோசனை நடந்தது. தற்போது காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் ராஜேஷ்குமார், விஸ்வநாதன் ஆகியோர் விஜய் அமைச்சரவையில் இடம்பெற உள்ளதாக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இதன் மூலம் 59 ஆண்டுகளுக்கு பிறகு அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement