இண்டிகோ விமானத்தில் கோளாறு; அரை மணி நேரம் பரிதவித்த பயணிகள்
வதோதரா: குஜராத்தில் இண்டிகோ விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சுமார் அரை மணிநேரம் மின் விளக்கு மற்றும் ஏசி இல்லாமல் பயணிகள் பெரிதும் சிரமப்பட்டனர்.
குஜராத் மாநிலம் வதோதராவில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 8.40 மணிக்கு 160 பயணிகளுடன் இண்டிகோ விமானம், டில்லி நோக்கி புறப்பட தயாராக இருந்தது. பயணிகள் அனைவரும் ஏறி அமர்ந்திருந்த நிலையில், விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால், விமானத்தில் மின் விளக்குகள் அணைந்தன. மேலும், ஏசியும் வேலை செய்யவில்லை.
இதனால், பயணிகள் அனைவரும் இருளில் ஏசியின்றி அமர வேண்டிய நிலை ஏற்பட்டது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை வியர்த்து விறுவிறுத்துப் போகினர். சுமார் அரைமணி நேரத்திற்கு பின்பே கோளாறு சரி செய்யப்பட்டது.
இந்தக் கோளாறு காரணமாக ஒரு மணி நேரம் 20 நிமிடங்கள் தாமதமாக விமானம் புறப்பட்டு சென்றது.
பைலட்டும், ஏர் ஹோஸ்டஸ்களும் ஜாலியா கதவை திறந்து வெளியே காத்து வாங்குவாங்க.
எதிர்பாராத விதமாக நிகழும் இம்மாதிரி கோளாறுகளை பெரிது படுத்த வேண்டாம் ..ஏர் இந்திய கடந்த ஆண்டு 25000 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கியிருக்கிறது .. அவர்கள் அடக்கமாக சேவை தருகிறார்கள்