திருப்பூரில் வாகன சோதனையில் 200 ரூபாய் லஞ்சம் பெற்ற வீடியோ வைரல்; எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட்

4

திருப்பூர்: திருப்பூரில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, 200 ரூபாய் லஞ்சம் பெற்ற எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட் செய்யப்பட்டார். வீடியோ வெளியானதை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

திருப்பூர் மாநகரம், நல்லுார் போலீஸ் ஸ்டேஷனை சேர்ந்த எஸ்.எஸ்.ஐ. மோகன், 52 என்பவர், முதலிபாளையத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஆடு ஏற்றி வந்த சரக்கு வாகனம் உள்ளிட்ட நபர்களிடம் தலா, 200 ரூபாய் விதம் லஞ்சம் பெற்றுள்ளார்.

இது தொடர்பாக வீடியோ சமூகவலைதளத்தில் வெளியானது. அந்த வீடியோவில் எஸ்எஸ்ஐ 200 ரூபாய் லஞ்சம் பெற்ற காட்சிகள் இடம்பெற்று இருந்தது. இது தொடர்பாக விசாரித்து, அவரை சஸ்பெண்ட் செய்து திருப்பூர் தெற்கு துணை கமிஷனர் தீபா சத்யன் உத்தரவிட்டார்.

Advertisement