கே.புதுப்பட்டியில் பொங்கல் திருவிழா

எஸ்.புதுார்:எஸ்.புதுார் அருகே கே.புதுப்பட்டி முத்துமாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழா நடந்தது. மே.10 ல் காப்பு கட்டுதலுடன் துவங்கி தினமும் வழிபாடு, அன்னதானம் நடந்தது. முத்துமாரியம்மன் மின்னொளி சப்பரத்தில் வீதி உலா வந்தார்.

பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். பக்தர்கள் உடம்பில் சேறு பூசியும், வேடங்கள் அணிந்தும் ஆட்டம், பாட்டத்துடன் ஊர்வலமாக வந்து முத்துமாரியம்மன் கோவிலில் வழிபட்டனர்.

Advertisement