திக் .. திக் .. மனநிலையில் உள்ளாட்சி தலைவர்கள்

கம்பம்:புதிய ஆட்சி பொறுப்பேற்றுள்ளதால் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் உள்ள தலைவர்கள் திக்.. திக்... மன நிலையில் உள்ளனர்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு த.வெ.க. ஆட்சியை பிடித்துள்ளது. ஊராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இல்லை. மாறாக மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் உள்ளனர். இவை பெரும்பாலும் தி.மு.க. வசம் நிர்வாகங்கள் உள்ளன. உள்ளாட்சி நிர்வாகங்களில் பதவி காலம் 4 ஆண்டுகளை கடந்து விட்டது. இன்னமும் 11 மாதங்கள் உள்ளன. இந்நிலையில் த.வெ.க. புதிய அரசு பொறுப்பேற்றுள்ளதால் உள்ளாட்சி தலைவர்கள் எந்த நேரமும் உள்ளாட்சிகளை கலைத்து அரசு உத்தரவிடும் என்ற திக் ... திக் ... மன நிலையில் உள்ளனர்.

Advertisement