தடுப்புச் சுவர்களில் சேதமடைந்த தடுப்புகள்
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மூலக்கரை பஸ் ஸ்டாப் பகுதியில் ரோட்டின் நடுவே தடுப்புச் சுவர் மேல் அமைக்கப்பட்டுள்ள சில்வர் தடுப்பு குழாய்கள் சேதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளன.
பழங்காநத்தம் ரவுண்டானா முதல் திருநகர் மூணாவது பஸ் ஸ்டாப் வரை நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. குறைவான உயரத்தில் தடுப்புச் சுவர் கட்டப்பட்டது. அந்த தடுப்புச் சுவரில் பல இடங்களில் தடுப்பு சில்வர் குழாய்கள் பொருத்தப்பட்டன.
ஹார்விபட்டி, மூலக்கரை உட்பட பல்வேறு இடங்களில் அந்தத் தடுப்புக் குழாய்கள் சேதமடைந்தும், கீழே சாய்ந்தும், வெளிப்பகுதி நீட்டிக் கொண்டும் இருக்கின்றன. அப்பகுதியில் டூவீலரில் செல்வோர் அச்சத்துடனே செல்கின்றனர்.
தரமில்லாமத தடுப்புச் சுவரும், இரும்புக் கம்பிகளும் அமைக்கப்பட்டுள்ளதால் இதுபோன்ற பிரச்னை ஏற்படுகிறது. ரோட்டின் நடுவில் உள்ள தடுப்புக் கம்பிகளை அகற்றிவிட்டு சுவர் கட்ட வேண்டும். அப்போதுதான் பயமின்றி வாகனங்களை ஓட்டிச்செல்ல முடியும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.
மேலும்
-
காமாட்சியம்பாள் கோயிலில் லலிதா சஹஸ்ரநாமம் நிறைவு
-
தொடர்கிறது வெடிகுண்டு மிரட்டல்
-
வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுகிறதா துணை கமிஷனர்கள் குழு கண்காணிப்பு
-
கழிப்பறை கதவு உடைந்து தொங்குது; தண்ணீர் வருவதில்லை காந்திபுரம் துாய்மை பாரதம் கழிப்பறையில் பராமரிப்பு மோசம்
-
இன்று இனிதாக (21.05.2026) கோவை
-
சுவையான, தரமான உணவு தயாரிக்க அம்மா உணவக ஊழியர்களுக்கு பயிற்சி தமிழக முதல்வர் உத்தரவு எதிரொலி