பைன் பாரஸ்ட்டில் குவிந்த சுற்றுலா பயணியர்

ஊட்டி: ஊட்டியில் நடப்பாண்டு கோடை சீசனை ஒட்டி , அரசு தாவரவியல் பூங்கா , ரோஜா பூங்கா , படகு இல்லம் , தொட்டபெட்டா காட்சி முனை , சூட்டிங் மட்டம் , பைன் பாரஸ்ட் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணியரின் வருகை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் , பைன் பாரஸ்ட் பகுதியில் வானுயர்ந்த பைன் மரங்களின் இடையே இயற்கை காட்சியை ரசிக்க காலை முதலே சுற்றுலா பயணியரின் வருகை வழக்கத்தை விட அதிகரித்து வருகிறது. மரங்களுக்கு இடையே குடும்பத்துடன் செல்பி, போட்டோ எடுத்து சுற்றுலா பயணியர் மகிழ்ந்தனர். வனத்தை ஒட்டியுள்ள காமராஜர் சாகர் அணை அருகே, சுற்றுலா பயணியர் செல்ல அனுமதி இல்லை. அத்துமீறி நுழையும் சுற்றுலா பயணியரை வனத்துறையினர் கண்காணிக்க வருகின்றனர்.

Advertisement