துாதையில் டிரான்ஸ்பார்மர் பழுது தண்ணீர் பாய்ச்ச முடியாமல் தவிப்பு   

படம் உண்டு சிவகங்கை, மே 22-திருப்பாச்சேத்தி அருகே துாதையில் டிரான்ஸ்பார்மர் பழுதாகி பல நாட்களாகியும் சரி செய்யாததால், பொதுமக்கள், விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இங்குள்ள மின் டிரான்ஸ்பார்மர் மூலம் துாதை, வடக்கு திருப்பாச்சேத்தியில் உள்ள 30 க்கும் மேற்பட்ட வீடுகள், 20 க்கும் மேற்பட்ட விவசாய மின்மோட்டார்களுக்கு மின் வினியோகம் நடக்கிறது. டிரான்ஸ்பார்மரை பராமரிக்காமல் விட்டதால் திடீரென பழுதாகி விட்டது. பல நாட்களான நிலையில் புதிதாக மாற்று டிரான்ஸ்பார்மரை பொருத்த மின்வாரிய அதிகாரிகள் முன்வரவில்லை. விவசாயிகள், பொதுமக்கள் பல முறை புகார் செய்தும் கண்டு கொள்ளவில்லை. இதனால் மின்சாரமின்றி நடவு செய்த பயிர்களை காப்பாற்ற முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். * காயும் பயிர்களால் தவிப்பு: இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: தற்போது வீடுகளுக்கு மட்டுமே அருகில் உள்ள டிரான்ஸ்பார்மர் மூலம் மின் வசதி செய்து கொடுத்துள்ளனர். ஆனால் பழுதான டிரான்ஸ்பார்மரை மாற்றி தராததால், ஒரு வாரமாக பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் தவித்து வருகிறோம் என்றனர். ///

 

Advertisement