திருப்புத்துார் வைகாசி விசாக விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
திருப்புத்துார்,மே 22-
திருப்புத்துார் திருத்தளிநாதர் சமேத சிவகாமி சுந்தரி அம்பாள் கோயிலில் வைகாசி விசாக பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் வைகாசி விசாக விழா பத்து நாட்கள் நடைபெறும். விழா துவக்கத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை சிவாச்சார்யார்களால் பூர்வாங்க பூஜை துவங்கியது. கொடி மரம் அருகில் சோமஸ்கந்தர், பெரியவுடையார் ஸ்கந்தர், சிவகாமி அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர்,வள்ளி தெய்வானை சுப்பிரமணியன், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட ஐம்பெரும் கடவுளர்கள் எழுந்தருளினர். தொடர்ந்து கொடிப்படம் திருவீதி வலம் வந்தது.
நேற்று காலை 6:00 மணிக்கு நந்தி மண்டபத்தில் யாகசாலை பூஜைகள் துவங்கின. பூஜை நிறைவடைந்து பூர்ணாகுதி தீபாராதனை நடந்து கொடிமரத்திற்கு அபிேஷக,ஆராதனைகள் நடந்தன.
காலை 7:40 மணிக்கு பாஸ்கர் குருக்களால் கொடியேற்றம் நடந்தது.சிவாச்சார்யாருக்கு காப்பு கட்டுதல் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கும்,கொடிமரத்திற்கும் பூஜை நடந்து தர்ப்பை புற்களால் அலங்கரிக்கப்பட்ட கொடி மரத்திற்கு அலங்கார சிறப்புத் தீபாராதனை நடந்தது. இரவில் சூரிய பிறை, சந்திர பிறைகளில் சுவாமி,அம்பாள் எழுந்தருள திருவீதி உலா நடந்தது.
நாளை இரவு கற்பக விருட்சம்,காமதேனு வாகனத்தில் திருவீதி உலா நடைபெறும். தினசரி இரவில் வாகனங்களில் சுவாமி,அம்பாள் எழுந்தருள திருவீதி உலா நடைபெறும். மே 24 காலையில் திருத்தளிநாதருக்கு மந்திரநீர் முழுக்காட்டு தீபாராதனை, மே 25 ல் திருக்கல்யாணம், மே 28 காலையில் நடராஜர் திருவீதி உலா, மே 29ல் தேரோட்டம், மே 30ல் தெப்பத்திருவிழா நடைபெறும்.
மேலும்
-
பெட்ரோல், டீசல் விற்பனையில் எந்தவித கட்டுப்பாடும் விதிக்கவில்லை; இந்தியன் ஆயில் நிறுவனம் .
-
கார்களின் விலையை ரூ.30 ஆயிரம் உயர்த்துகிறது மாருதி சுசூகி
-
தமிழகத்தில் தகதகக்கும் வெயில்; 16 இடங்களில் அடித்தது சதம்
-
குரு பெயர்ச்சி ஜப ஹோமம்
-
பாதுகாப்பு உபகரணம் இல்லாமல் பணயில் ஈடுபட்ட மின்ஊழியர்கள்
-
பொது பாதை தொடர்பாக தகராறு 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு