உர மேலாண்மை விழிப்புணர்வு

தேவகோட்டை, மே22 -

தேவகோட்டை தாலுகா திராணி கிராமத்தில் வேளாண் துறை அட்மா விரிவாக்க சீரமைப்பு திட்டம் மற்றும் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் சமச்சீர் உரம் மேலாண்மை விழிப்புணர்வு நடந்தது. வேளாண்மை உதவி இயக்குநர் கமலா தேவி பயிரின் தேவை மண்வளம் தட்ப வெட்ப நிலைக்கு ஏற்ப தழைச்சத்து மணிச்சத்து சாம்பல் சத்து மற்றும் நுண்ணுாட்ட சத்துக்களை சரியான விகிதத்தில் சமச்சீர் உரம் மேலாண்மையாக பயன்படுத்த விவசாயிகளை கேட்டு கொண்டார். குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலைய பயிற்சியாளர் நாகலட்சுமி , தினேஷ், உதவி வேளாண்மை அலுவலர் விக்னேஸ்வரன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் தமிழ்ச்செல்வி, எஸ்தர், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் குருதாஸ், அர்ச்சனா பங்கேற்றனர்.

Advertisement