வீட்டிற்கு தீ வைத்ததில் காயமான பெண் உயிரிழப்பு
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை பாலையம்பட்டியில் உள்ள வீட்டில் மர்ம நபர் தீ வைத்ததில் தூங்கிக் கொண்டிருந்த 2 பெண்கள் படுகாயமடைந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.
அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் சாந்தி, 40, கோபாலபுரத்தில் துப்புரவு பணியாளராக இருந்தார். 3 நாட்களுக்கு முன்பு, செவிலியராக இருக்கும் இவரது உறவினர் ஸ்ரீதேவி, 45, வீட்டிற்கு வந்துள்ளார். இரவில் துாங்கிக் கொண்டிருந்த போது, அதிகாலை 3:00 மணிக்கு மர்ம நபர் வீட்டிற்கு தீயை வைத்ததில், சாந்தி, ஸ்ரீதேவி படுகாயமடைந்தனர்.
அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசார் கல்குறிச்சியை சேர்ந்த முத்து 60,வை கைது செய்து விசாரித்ததில் தீ வைத்ததை ஒப்புக்கொண்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சாந்தி உயிரிழந்தார்.
மேலும்
-
2 நாட்களில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு; வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் அதிகரிப்பு
-
அரசு விவகாரங்களில் தவெகவினர் தலையிடக் கூடாது; அமைச்சர் ஆனந்த் கண்டிப்பான உத்தரவு
-
ஜூன் 18ல் ராஜ்யசபா இடைத்தேர்தல்; தவெகவுக்கு ஜாக்பாட்
-
முதல்வர் விஜய் அமைச்சரவை விரிவாக்கம்; விசிக, முஸ்லிம் லீக் அமைச்சர்கள் பதவியேற்பு
-
ஹோண்டுராஸில் இரு இடங்களில் துப்பாக்கிச்சூடு; 6 போலீசார் உள்பட 25 பேர் சுட்டுக்கொலை
-
இந்தியாவின் சந்திரயான்-3 திட்டம்; அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் விருது வழங்கி கவுரவிப்பு