நம் பயணம் ஒருநாளும் ஓயாது, என்றென்றும் தொடரும் ; தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்
சென்னை: கருணாநிதி பிறந்த நாளையொட்டி திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அவரது பதிவில் ; நேர்லயும் சோஷியல் மீடியாக்கள்லயும் உடன்பிறப்புகளான நீங்க வெளிப்படுத்துற உணர்வுகளைக் கவனிக்குறேன். தேர்தல் முடிவுகளைக் கடந்து, தலைவர் கருணாநிதி ஊட்டிய உணர்வோட பயணிக்குற நமக்கு, புத்தெழுச்சி ஊட்டக் கூடிய நாளா, தலைவர் கலைஞரின் பிறந்தநாள் வருது!
ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் வழங்கி, தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளைக் கொண்டாடுற அதேவேளையில், சோஷியல் மீடியாவுலயும் கருணாநிதியின் வரலாற்றுச் சாதனைகளைப் பரப்புவோம்! இளைய தலைமுறைக்கு நம்மோட வரலாற்றையும் - தேவையையும் எடுத்துச் சொல்வோம்!
தமிழ்நாட்டின் எதிர்காலம் சிறக்கணும்னா அதுக்கு தி.மு.க.தான் தேவை என்பதை இளைஞர்களுக்குச் சொல்ல தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளில் உறுதியேற்று உழைக்கத் தொடங்குவோம்!
அற்ற குளத்து அறுநீர்ப் பறவை போல இல்லாமல், கொட்டியும் ஆம்பலும் போல எப்போதும் உடனிருப்பவர்கள் தான் திமுக உடன்பிறப்புகள்.
கருணாநிதியின் உடன்பிறப்புகளான நமக்கு ஊக்கமும், உற்சாகமும் தருவதற்காகவே வரவிருக்கிறது, ஜூன், கருணாநிதியின் பிறந்த நாள்.
அந்த நாளில் கட்சிக் கிளைகள் எங்கும் கருப்பு, சிவப்புக்கொடி உயர்ந்து பறக்கட்டும். ஏழைகளுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த முன்னோடிகளுக்கும் உதவிகள் வழங்குங்கள்.
இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அனைத்து சமூகவலைதளங்களில், நவீன தமிழகத்தின் சிற்பு கருணாநிதியின் வரலாற்று சாதனைகளைப் பரப்புங்கள்.
திமுகவினரான நம் பயணம் ஒருநாளும் ஓயாது, என்றென்றும் தொடரும் என ஜூன் 3ம் தேதியன்று கருணாநிதி மீது ஆணையிட்டு உறுதியேற்போம், எனக் குறிப்பிட்டுள்ளார்.
யப்பா சாமி உன்னோட ரீல் அந்து 10 நாட்கள் ஆச்சு பேசாம மறுபடியும் குடும்பத்தோட கொடைக்கானலுக்கு போயி சைக்கிள் ஓட்டுங்க
Annal Stalin mattum uranguvar
கள்ளிப்பால் முறை இருந்ததாக டைமண்டு கவிஞர் சினிமாவில் பாட்டு எழுதினார். இது உண்மையா இருந்து அந்த குறிப்பிட்ட ஒருவருக்கு குடுத்து இருந்தால்...
டெல்லியில் ஒருவர் 2014 ஆம் ஆண்டு முதல் தினமும் புலம்பி வருகிறார் உங்களுக்கும் அதே நிலை இப்போது முதல் நீங்கள் கடைசி வரை ஒப்பாரி வைத்துக் கொண்டே இருப்பீர்கள் புலம்பி கொண்டே இருப்பீர்கள்.
எங்கே பயணம்? உடனே கிளம்புங்க. வேண்டுமென்றால் உங்கள் அனைவருக்கும் ரயிலில் செல்வதற்கு டிக்கெட் நானே எடுத்துக்கொடுக்கிறேன்.
தமிழ்நாட்டில் மக்கள் எல்லோரும் என் பின்னாடி என்றீர். அப்புறம் தான் உமக்கே தெரிந்தது, எல்லோரும் உமக்கு முன்னாடி வேறு ஒருவர் பின்னாடி சென்றது. இனி உமது புலம்பலை ஒரு கண்ணாடி முன் நின்று பிதற்றும். அதில் தெரியும் பிம்பம் மட்டுமே கேட்கும் உம் பிதற்றலை.
டப்பா பஸ் என்று அப்பா / அண்ணா சொன்னாரே ? அவ்ருடைய பஸ்சை தான் சொல்லி இருக்கிறாரோ . இது போன்ற வண்டியை வைத்து கொண்டு எப்படி பயணம் ஓயமால் செய்ய முடியும் ??? அட ராகவா
அவரு முரசொலில கடிதம் எழுதிருப்பாரு .. உங்களுக்கு வேற வேலை இல்லியா.. இந்த பகுதில வேற நல்ல செய்தி போட்ருக்கலாம்.
பயணங்கள் முடிவதில்லை ... பிரயாணம் செய்பவர்கள் மட்டும் அல்ல ஓட்டுநர்களும் நடத்துனர்களும் ரிட்டையர்டு ஆகிவிடுகிறாரார்கள். சிலர் அடுத்த பஸ்ஸில் இருந்து இந்த பஸ்ஸில் ஏறி நல்ல இடம் பிடித்து விடுகிறார்கள். நீண்ட கால பிரயாணிகளான தொண்டர்கள் பஸ் தள்ளிவிட மட்டும்தான் இருக்கிறார்கள். பஸ்ஸும் இப்போ ஓட்டை வண்டியாகி இப்போ பிரேக்டௌன் ஆகி நிக்கிறதுமேலும்
-
2 நாட்களில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு; வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் அதிகரிப்பு
-
அரசு விவகாரங்களில் தவெகவினர் தலையிடக் கூடாது; அமைச்சர் ஆனந்த் கண்டிப்பான உத்தரவு
-
ஜூன் 18ல் ராஜ்யசபா இடைத்தேர்தல்; தவெகவுக்கு ஜாக்பாட்
-
முதல்வர் விஜய் அமைச்சரவை விரிவாக்கம்; விசிக, முஸ்லிம் லீக் அமைச்சர்கள் பதவியேற்பு
-
ஹோண்டுராஸில் இரு இடங்களில் துப்பாக்கிச்சூடு; 6 போலீசார் உள்பட 25 பேர் சுட்டுக்கொலை
-
இந்தியாவின் சந்திரயான்-3 திட்டம்; அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் விருது வழங்கி கவுரவிப்பு