ஓய்வூதியர் பேரவை கூட்டம்
சிவகங்கை:சிவகங்கையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்ட பேரவை கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் திரவியம் தலைமை வகித்தார். துணை தலைவர் வீணபாண்டியன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் சங்கரசுப்பிரமணியன், பொருளாளர் ஹக்கீம் அறிக்கை வாசித்தனர்.
மாநில பொருளாளர் எட்டியப்பன் துவக்க உரை ஆற்றினார். மாநில செயலாளர் முத்துராமலிங்கம், முன்னாள் மாநில செயலாளர் ராபர்ட் ஆகியோர் பேசினர். மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் நிறைவுரை ஆற்றினார்.
மாவட்ட நிர்வாகிகள் சேது, தனுஷ்கோடி. அப்துல் அஜீஸ், முகமது ரபீக், வாழவந்தான், அருள்சாமி, வீரபாண்டியன், முகமது அப்துல் ரஹிம், முத்து மாடன், அர்ச்சுனன் தீர்மானங்களை முன்மொழிந்தனர். பழைய பென்ஷன் திட்டம், மருத்துவ படி ரூ. 1,000, சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உட்பட 16 அம்ச தீர்மானங்களை நிறைவேற்றினர். மாவட்ட இணை செயலாளர் அப்துல் அஜீஸ் நன்றி கூறினார்.
மேலும்
-
காமாட்சியம்பாள் கோயிலில் லலிதா சஹஸ்ரநாமம் நிறைவு
-
தொடர்கிறது வெடிகுண்டு மிரட்டல்
-
வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுகிறதா துணை கமிஷனர்கள் குழு கண்காணிப்பு
-
கழிப்பறை கதவு உடைந்து தொங்குது; தண்ணீர் வருவதில்லை காந்திபுரம் துாய்மை பாரதம் கழிப்பறையில் பராமரிப்பு மோசம்
-
இன்று இனிதாக (21.05.2026) கோவை
-
சுவையான, தரமான உணவு தயாரிக்க அம்மா உணவக ஊழியர்களுக்கு பயிற்சி தமிழக முதல்வர் உத்தரவு எதிரொலி