கார்களின் விலையை ரூ.30 ஆயிரம் உயர்த்துகிறது மாருதி சுசூகி

2

புதுடில்லி: செலவு அதிகரிப்பு காரணமாக மாருதி சுசூகி நிறுவனத்தின் அனைத்து மாடல் கார்களின் விலையை ரூ.30 ஆயிரம் உயர்கிறது.


இது தொடர்பாக பங்குச்சந்தையில் மாருதி சுசூகி நிறுவனம் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியுள்ளதாவது: உற்பத்தி செலவு அதிகரிப்பு காரணமாக அனைத்து மாடல் கார்களின் விலையை 30 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்த முடிவு செய்துள்ளோம். இது ஜூன் மாதம் முதல் அமலுக்கு வருகிறது.

கடந்த சில நாட்களாக விலை உயர்வை தடுக்க, செலவு குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்தோம். ஆனால், பண வீக்கத்தால் ஏற்படும் அழுத்தம் அதிகமாகவும், செலவு அதிமாக உள்ளதால், அதன் ஒரு பகுதியை சந்தைக்கு திருப்ப வேண்டி உள்ளது. அதேநேரத்தில் , இந்த தாக்கம், வாடிக்கையாளர்கள் குறைவாக இருப்பது உறுதி செய்யப்படும். விலை உயர்வு ஒவ்வொரு மாடலை பொறுத்து மாறுபடும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தற்போதைய விலை நிலவரம்



மாருதி சுசூகி நிறுவனத்தின் கார்கள் 3.50 லட்ச ரூபாய் முதல் 24.97 லட்ச ரூபாய் வரை உள்ளன.
எஸ் பிரஸ்சோ மாடல் கார்கள் 3.50 லட்ச ரூபாய் முதல் 5.25 லட்ச ரூபாய் வரை விற்பனை ஆகிறது.

ஆல்டோ கே 10 மாடல் கார்கள் 3.70 லட்ச ரூபாய் முதல் 5.45 லட்ச ரூபாய் வரையிலும்,

செலிரோ மாடல் கார்கள் 4.70 லட்ச ரூபாய் முதல் 6.73 லட்ச ரூபாய் வரை விற்பனை ஆகிறது.

அதேநேரத்தில் எந்த மாடல் காருக்கு அதிகபட்சமாக விலை உயர்த்தப்படுகிறது என்பதை மாருதி சுசூகி நிறுவனம் அறிவிக்கவில்லை.

Advertisement