பாதுகாப்பு உபகரணம் இல்லாமல் பணயில் ஈடுபட்ட மின்ஊழியர்கள்

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டில், மின்கம்பம் நடும் பணியில் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி மின்ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர்.

கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டில் மின் கம்பம் நடும் பணி நேற்று முன்தினம் இரவு நடந்தது. மின் கம்பம் நடப்பட்ட போது, கம்பத்தில் இருந்த கயிறை அவிழ்க்க, பணியாளர் ஒருவர் எந்தவித பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல், பொக்லைன் இயந்திரம் வாயிலாக மேலே சென்று கயிறை அவிழ்த்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பொதுமக்கள் கூறுகையில், ‘தனியார் நிறுவனத்தில் கூட பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் உயரமான கம்பத்தில் ஏறக்கூடாது என்ற விதிமுறை உள்ளது. ஆனால், அரசுத் துறைகளில் எவ்வித பாதுகாப்பு நடவடிக்கையையும் ஊழியர்கள், அதிகாரிகள் கடைபிடிப்பதில்லை.

மின்கம்பம் நடும் போது, எந்தவித பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பொக்லைன் இயந்திரம் வாயிலாக மேலே சென்று கீழே இறங்குவது ஆபத்தானது. சிறிது கவனம் சிதறினாலும், கீழே விழும் அபாயம் உள்ளது. இதற்கு அரசு பொறுப்பு ஏற்குமா?. எனவே, இனி வரும் நாட்களில் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் மின் ஊழியர்கள் பணியில் ஈடுபடக்கூடாது என, உயர் அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும்,’ என்றனர்.

Advertisement