பொது பாதை தொடர்பாக தகராறு  7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு  

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே பொது பாதை தொடர்பான பிரச்னையில் இரு குடும்பத்தை சேர்ந்த 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். 

கள்ளக்குறிச்சி அடுத்த புக்கிரவாரி கிராமத்தை சேர்ந்த ரவி மனைவி சித்ரா,32; இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த ராம்கி மனைவி அமிர்தவள்ளி23;க்கும் இடையே பொது பாதை மற்றும் விவசாய நிலத்தை பயன்படுத்துவது தொடர்பாக கடந்த 15 ம் தேதி காலை 11 மணிக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் இரு குடும்பத்தினர் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.

இது குறித்து இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் அமிர்தவள்ளி, முனியன் மகன் திருமலை,20; முனியன்,50; ஆகியோர் மீதும், மற்றொரு தரப்பில் சித்ரா, ரமேஷ் மனைவி ராணி,25; அர்ஜுன் மனைவி மகேஸ்வரி,31; சேகர் மனைவி சுமதி,23; ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.   

Advertisement