த நியூ ஜான்டூயி பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை
விழுப்புரம்: விழுப்புரம் த நியூ ஜான்டூயி மெட்ரிக் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வில் மதிப்பெண் சாதனை படைத்துள்ளனர்.
இப்பள்ளியில் தேர்வு எழுதிய பள்ளி மாணவர் ேஹமச்சந்திரன் 500க்கு 489, அர்ஷித் 481, மாணவி சனாஸ்ரீ 477 மதிப்பெண் பெற்று சிறப்பிடங்களைப் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
மேலும், தேர்வெழுதிய 53 மாணவர்களில் 17 பேர் 400 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்துள்ளனர். பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர் வீரதாஸ் பாராட்டி, கேடயம் வழங்கி கவுரவித்தார். செயலாளர் ெஷர்லி வீரதாஸ், நிர்வாக அதிகாரி எமர்சன் ராபின், முதன்மை ஒருங்கிணைப்பாளர் சுகன்யா, உட்பட முதல்வர், தலைமை ஆசிரியை மற்றும் பெற்றோர்கள், மாணவர்களை வாழ்த்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement