புலியிடம் சிக்கி பசு பலி
மூணாறு, மே 21-
புலியிடம் சிக்கி பலத்த காயம் அடைந்து நடக்க இயலாத பசுவை, அதே இடத்தில் விட்டு சென்ற நிலையில் மீண்டும் வந்த புலி பசுவை கொன்றது.
மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்கு சொந்தமான கடலார் எஸ்டேட், வெஸ்ட் டிவிஷனை சேர்ந்தவர் தொழிலாளி கோமதிதாய். அவருக்கு சொந்தமான பசு நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு சென்றபோது, தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்பு அருகில் உள்ள தேயிலை தோட்ட எண் 19ல் புலியிடம் சிக்கி பலத்த காயம் அடைந்தது. மாலையில் பசு வீடு திரும்பாததால், அதனை தேடி சென்றபோது புலியிடம் சிக்கி பலத்த காயம் அடைந்தது தெரியவந்தது. பலத்த காயம் அடைந்த பசுவால் எழுந்து நடக்க இயலாத நிலை ஏற்பட்டதால், சம்பவ இடத்திலேயே விட்டு சென்றனர். அங்கு இரவில் மீண்டும் வந்த புலி பசுவை கொன்று சிறிது தூரம் இழுத்து சென்று, அதன் இறைச்சியை தின்றது. அப்பகுதியினர் நேற்று காலை சென்றபோது உடல் பாதி தின்ற நிலையில் பசு கிடைந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். சம்பவ இடத்தில் வனத்துறையினர் ஆய்வு நடத்தினர். அப்பகுதியில் புலிகள் நடமாட்டம் அதிகரித்தால், அவற்றை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும்
-
பெட்ரோல், டீசல் விற்பனையில் எந்தவித கட்டுப்பாடும் விதிக்கவில்லை; இந்தியன் ஆயில் நிறுவனம் .
-
கார்களின் விலையை ரூ.30 ஆயிரம் உயர்த்துகிறது மாருதி சுசூகி
-
தமிழகத்தில் தகதகக்கும் வெயில்; 16 இடங்களில் அடித்தது சதம்
-
குரு பெயர்ச்சி ஜப ஹோமம்
-
பாதுகாப்பு உபகரணம் இல்லாமல் பணயில் ஈடுபட்ட மின்ஊழியர்கள்
-
பொது பாதை தொடர்பாக தகராறு 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு