உட்கட்சி பிரச்னை என்றாலும் அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ்தான்; நயினார் நாகேந்திரன்

9

கோவை: தேர்தல் முடிந்தவுடன் அதிமுகவில் உட்கட்சி பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதை பற்றி கருத்து சொல்ல முடியாது என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சட்டசபை தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் அடுத்தக்கட்டமாக எடுக்க வேண்டிய செயல்பாடுகள் குறித்து விவாதிக்க பாஜ மையக்குழு கூட்டம் கோவையில் கூடியது. இந்த கூட்டத்திற்கு வந்திருந்த தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவர் கூறியதாவது;

தேர்தலுக்கு பின்னர் மக்களை எப்படி சந்திக்க வேண்டும், அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து விவாதிக்கிறோம். இதுபோன்ற கூட்டங்களை கோவையில் நடத்துவதற்கு என்று சிறப்பு காரணங்கள் எதுவும் கிடையாது. கடந்த முறை இதுபோன்ற கூட்டம் சென்னையில் நடந்தது.

அதிமுகவை பொறுத்தவரை, அக்கட்சியின் பொதுச் செயலாளர் இபிஎஸ்தான். தேர்தல் முடிந்த பின்னர், அவர்களுக்குள் உட்கட்சி பிரச்னை ஏற்பட்டுள்ளது. அது குறித்து இப்போது எதுவும் சொல்லமுடியாது.

இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.

இன்றைய பாஜ மையக்குழுக் கூட்டத்திற்கு பின்னர் நாளை (மே 21) பாஜ நிர்வாகிகள் கூட்டம் நடைபெற இருக்கிறது.

Advertisement