வட்டார வள மைய ஆவணங்கள் எரிப்பு
திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டார வள மையத்தில் நேற்று மாலை பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஆவணங்களை அதிகாரிகள் தீ வைத்து எரித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திருப்புவனம் அரசு ஆண்கள் பள்ளி விளையாட்டு மைதானத்தில் வட்டார வளமையம் செயல்பட்டு வருகிறது. இந்த வட்டாரத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கட்டட வசதி, மின்வசதி, குடிநீர் வசதி உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து அறிக்கை அனுப்புவதுடன் , அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்குவதும் வழக்கம்.
நேற்று மாலை 5:30 மணிக்கு அலுவலக நேரம் முடிந்த பின் பள்ளி விளையாட்டு மைதானத்தில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் ராஜா தலைமையில் ஏராளமான ஆவணங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. மூடை மூடையாக ஆவணங்கள் எரிக்கப்பட்ட நிலையில் சிலர் அலைபேசியில் படம் எடுக்கவே அதிகாரிகள் அங்கிருந்து சென்று விட்டனர்.
வட்டார வளமைய மேற்பார்வையாளரிடம் கேட்ட போது, இந்தாண்டு திருப்புவனம் புதுார் தெற்கு பள்ளியில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கான வகுப்புகள் வட்டார வள மையத்திற்கு மாற்றப்படுகிறது. இடப்பற்றாக்குறை காரணமாக தேவையில்லாத, 2007 முதல் 2010 வரை பள்ளிகள் வழங்கிய பழைய ஆவணங்கள் ஆகியவற்றை கரையான் அரித்து விட்டதால் அவற்றை தீ வைத்து அழித்தோம் என்றார்.
மேலும்
-
பெட்ரோல், டீசல் விற்பனையில் எந்தவித கட்டுப்பாடும் விதிக்கவில்லை; இந்தியன் ஆயில் நிறுவனம் .
-
கார்களின் விலையை ரூ.30 ஆயிரம் உயர்த்துகிறது மாருதி சுசூகி
-
தமிழகத்தில் தகதகக்கும் வெயில்; 16 இடங்களில் அடித்தது சதம்
-
குரு பெயர்ச்சி ஜப ஹோமம்
-
பாதுகாப்பு உபகரணம் இல்லாமல் பணயில் ஈடுபட்ட மின்ஊழியர்கள்
-
பொது பாதை தொடர்பாக தகராறு 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு