காரைக்குடியில் பலத்த மழை கார் மீது விழுந்த மரங்கள்
காரைக்குடி: காரைக்குடியில் பலத்த காற்றுடன் பெய்த கன மழையால் மரங்கள், பிளக்ஸ் பேனர் சாய்ந்து கார்கள் மீது விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை பலத்த இடியுடன் கனமழை பெய்தது. இதில் டி.டி நகரில் மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது. அருகில் நின்று கொண்டிருந்த காரின் மீது மரம் விழுந்ததால் கார் சேதமானது. இதேபோல் செக்காலை சாலையில் உள்ள தியேட்டர் முன்பு வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர் சாய்ந்து சாலையில் விழுந்தது. சாலையோரம் நின்ற காரின் மீது பிளக்ஸ் பேனர் விழுந்ததோடு போக்குவரத்தும் பாதிப்பு ஏற்பட்டது. மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு துறையினர் மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பலத்த காற்று காரணமாக நீண்ட நேரம் மின்சாரம் தடைபட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பெட்ரோல், டீசல் விற்பனையில் எந்தவித கட்டுப்பாடும் விதிக்கவில்லை; இந்தியன் ஆயில் நிறுவனம் .
-
கார்களின் விலையை ரூ.30 ஆயிரம் உயர்த்துகிறது மாருதி சுசூகி
-
தமிழகத்தில் தகதகக்கும் வெயில்; 16 இடங்களில் அடித்தது சதம்
-
குரு பெயர்ச்சி ஜப ஹோமம்
-
பாதுகாப்பு உபகரணம் இல்லாமல் பணயில் ஈடுபட்ட மின்ஊழியர்கள்
-
பொது பாதை தொடர்பாக தகராறு 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு
Advertisement
Advertisement