ஜி.கே., மெட்ரிக் மேல்நிலை பள்ளி  10 ம் வகுப்பு பொது தேர்வில் அசத்தல் 

சிதம்பரம்: கடலுார் மாவட்டம், காட்டு மன்னார்கோவில், ஜி.கே., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 10 ம் வகுப்பு பொது தேர்வில் சிறப்பிடம் பெற்று, சாதனை படைத்துள்ளது. பள்ளி மாணவி, ஸ்ரீ பைரவி, 497 மதிப்பெண்கள் பெற்று, சிறப்பிடம் பெற்றுள்ளார். மாணவிகள் ராஜபாரதி 492; நித்யாஸ்ரீ 490; மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

மேலும் தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், 480 மதிப்பெண்களுக்கு மேல், 13 பேரும்; 470 மதிப்பெண்களுக்கு மேல், 17 பேரும்; 450 மதிப்பெண்களுக்கு மேல் 33 பேரும் மதிப்பெண் பெற்றுள்ளனர்.

மேலும் தமிழ் பாடத்தில், 16 பேரும், ஆங்கிலத்தில் 10 பேரும், கணிதத்தில் 15 பேரும், அறிவியலில் 11 பேரும், சமூக அறிவியலில் 6 பேரும், 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை ஜி.கே., கல்வி குழும தலைவர் குமாரராஜா பாராட்டி பரிசு வழங்கினார். பள்ளி இயக்குனர்கள் அருண், அகிலன், பள்ளி முதல்வர்கள் பார்த்திபன், தேவதாஸ் மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.

Advertisement