மாசாணியம்மன் கோவில் உண்டியல் திறப்பு

ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கையாக, 61 லட்சத்து, 65 ஆயிரத்து, 504 ரூபாய் இருந்தது.

ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. இங்கு, உள்ளூர் மட்டுமின்றி, வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவு வந்து செல்கின்றனர். பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக, கோவில் வளாகத்தில் நிரந்தர மற்றும் தட்டு காணிக்கை உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.

இதில், ஒன்பது தட்டு காணிக்கை உண்டியல்கள், 22 நிரந்தர உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணும் பணி நடந்தது. அதில், சலவநாயக்கன்பட்டி ஊர் பொது மக்கள், தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.

நிரந்தர மற்றும் தட்டு காணிக்கை உண்டியல்களில் மொத்தம், 61 லட்சத்து, 65ஆயிரத்து, 504 ரூபாய் இருந்தது.

மேலும், தங்கம், 47 கிராம், வெள்ளி, 201 கிராமும் இருந்தது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, மாசாணியம்மன் கோவில் தக்கார் ராஜ்குமார், துணை ஆணையர் சுவாமிநாதன், தக்கார் பிரதிநிதி கோகிலாவாணி, ஆனைமலை சரக ஆய்வர் சித்ரா முன்னிலையில் நடைபெற்றது. கண்காணிப்பாளர், கோவில் பணியாளர்கள் பங்கேற்றனர்.

Advertisement