'பி.எம்.டபுள்யூ., கார் விலை 3வது முறையாக உயரும்'

புதுடில்லி: பி.எம்.டபுள்யூ., சொகுசு கார்கள் விலை, நடப்பாண்டில் மூன்றாவது முறையாக உயர உள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஹர்தீப் பிரார் தெரிவித்துள்ளார்.

நடப்பாண்டு பிப்ரவரி, ஏப்ரல் மாதங்களில் விலை உயர்வை இந்நிறுவனம் அறிவித்தது. மேற்காசிய போர் பதற்றம், அன்னிய செலாவணி ஏற்ற இறக்கம், கப்பல் போக்குவரத்து தாமதம் மற்றும் செலவுகள் அதிகரிப்பு, வினியோக தொடர் பாதிப்பு ஆகியவை இதற்கு முக்கிய காரணங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், இந்நிறுவனத்தின் மொத்த கார் விற்பனை, 17 சதவீதம் உயர்ந்து, 4,567 கார்கள் விற்றுள்ளன. இதில், மின்சார கார் விற்பனை, 26 சதவீதம் உயர்ந்துள்ளது. உற்பத்தியில் உள்நாட்டு மயமாக்கல் அளவு, 50 சதவீதத்தில் இருப்பதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement