பிறந்த ஒரே நாளில் சாலையோரம் வீசப்பட்ட குழந்தை
சிக்கமகளூரு: பிறந்து ஒரு நாளே ஆன பெண் குழந்தையை, சாலையோரம் வீசிய சம்பவம், சிக்கமகளூரில் நடந்து உள்ளது.
சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.,புரா தாலுகாவின் முட்டினகொப்பா கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்டது கனிவே கிராமம்.நேற்று காலை இந்த கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர், நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது சாலை ஓரத்தில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டது. அருகில் சென்று பார்த்தபோது அதிர்ச்சியடைந்தார். உடலில் ரத்த காயங்களுடன், பழைய துணியில் சுற்றப்பட்டு, பிறந்து ஒரு நாளே ஆன பெண் குழந்தை இருந்தது.
இது குறித்து அங்கன்வாடி பணியாளர் பிரமிளாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த அவர், குழந்தைக்கு முதலுதவி அளித்தார். தகவல் அறிந்த என்.ஆர்.,புரா மாவட்ட எஸ்.பி., வீரேஷ், சுகாதாரத்துறை, பெண்கள் - குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் வந்தனர்.
மீட்கப்பட்ட குழந்தைக்கு மேல் சிகிச்சை அளிப்பதற்காக, ஷிவமொக்காவின் மெக்கான அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இக்குழந்தையை பராமரிக்கும் பொறுப்பை சிக்கமகளூரு அரசு சிறப்பு தத்தெடுப்பு நிறுவனம் ஏற்றுள்ளது. குழந்தை முழுதுமாக குணமடைந்த பின், இந்த நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும்.
என்.ஆர்.,புரா போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
பெங்களூருவில் தரையிறங்கும் போது ஏர் இந்தியா விமானம் விபத்து
-
ஒரே நாளில் 274 பேர்; எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து சாதனை
-
10ம் வகுப்பில் வெற்றி பெற்ற பழங்குடி மாணவர்களுக்கு வாழ்த்து
-
மாநில அளவில் சிறப்பிடம் மாணவனுக்கு பாராட்டு
-
தேர்ச்சி சதவீதம் உயர்த்தி காட்டிய கே.எஸ்.சி. – நஞ்சப்பா பள்ளிகள்
-
விளம்பர செய்தி பி.எஸ்., –––––––– கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., மாணவர்கள் மாவட்ட அளவில் சாதனை