கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., மாணவர்கள்  மாவட்ட அளவில் சாதனை 

கள்ளக்குறிச்சி: பத்தாம் வகுப்பு தேர்வில் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் சாதனை புரிந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி ஏ.கே.டி.,மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள், அரசு பொதுத் தேர்வுகளில் ஆண்டுதோறும் மாவட்ட அளவில் கல்வி சாதனை படைத்து வருகின்றனர். இந்து ஆண்டு மாணவர்கள் அனிஷ்ரூபன், ரோகித்கிருஷ்ணா ஆகியோர் 500க்கு 494 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவிலும், பள்ளியில் முதலிடமும் பிடித்து சாதனை புரிந்துள்ளார்.

மாணவர் ஜருக்ஸ் 493 மதிப்பெண் பெற்று பள்ளியில் இரண்டாமிடம் பிடித்துள்ளார். மாணவிகள் இஷா ஆண்ட்ரியா, பத்மஸ்ரீ ஆகியோர் 492 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம், மாணவன் சந்தோஷ், மாணவி ஷாஜிதா பேகம், மாணவன் கிரிவாசன் ஆகியோர் 491 மதிப்பெண் பெற்று நான்காமிடம் பிடித்தனர். கணிதம் பாடத்தில் 11 பேர், அறிவியல் 33, சமூக அறிவியல் 6 என மொத்தம் 50 பேர் 'சென்டம்' மதிப்பெண் எடுத்து மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளனர். பள்ளியில் 490க்கு மேல் 13 பேர், 480க்கு மேல் 52 பேர், 470க்கு மேல் 82 பேர், 450க்கு மேல் 141 பேர், 425க்கு மேல் 195 பேர், 400க்கு மேல் 243 பேர் மதிப்பெண் பெற்றுள்ளனர்.

அளவில் கல்வி சாதனை புரிந்து பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை பள்ளி தாளாளர் மகேந்திரன், செயலாளர் லட்சுமிபிரியா, நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன், நிர்வாக இணை இயக்குனர் டாக்டர் அபிநயா ராஜேந்திரன் ஆகியோர் பாராட்டி பரிசுகள் வழங்கி கவுரவித்தனர். நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் வெங்கட்ரமணன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் உட்பட பலர் பங்கேற்றனர்.

பள்ளியின் நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன் கூறியதாவது: ஏ.கே.டி., பள்ளி 'நீட்' தேர்வில் தொடர்ந்து முதலிடம் பிடித்து எம்.பி.பி.எஸ்., தரவரிசை பட்டியலில் மாநில அளவில் 7ம் இடம் பிடித்துள்ளது. இதுவரை அரசு இட ஒதுக்கீட்டின் கீழ் 646 பேர் மருத்துவ சேர்க்கை பெற்றுள்ளனர். என்டிஏ தேர்வில் 3 மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளனர். கல்வியின் மூலம் மாணவர்கள் வாழ்க்கையில் உயர்ந்த லட்சியங்களை அடைவதையே எங்களது இலக்காகவும், வெற்றியாகவும் கொண்டுள்ளோம் என்றார்.

Advertisement