மாநில அளவில் சிறப்பிடம் மாணவனுக்கு பாராட்டு

உடுமலை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற, மாணவனுக்கு, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

நேற்று முன்தினம் வெளியான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில், உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியைச்சேர்ந்த மாணவன் சந்தோஷ் கண்ணா, 500க்கு 496 மதிப்பெண்கள் பெற்று, மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளார்.

இம்மாணவன், எட்டாம் வகுப்பில் தேசிய திறனாய்வு தேர்விலும், முதல்வர்  திறனாய்வு தேர்விலும் தேர்வாகியுள்ளார்.

அம்மாணவனை பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் பாராட்டினர். இத்தகவலை பள்ளியின் பொறுப்பு தலைமையாசிரியர் ஈஸ்வரன் தெரிவித்தார்.

Advertisement