தேர்ச்சி சதவீதம் உயர்த்தி காட்டிய கே.எஸ்.சி. - நஞ்சப்பா பள்ளிகள்

திருப்பூர்:திருப்பூரில், 148 உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் இருந்தாலும், நகருக்குள் அதிக மாணவருடன் செயல்படும் பள்ளிகளாக கே.எஸ்.சி., நஞ்சப்பா, பழனியம்மாள், ஜெய்வாபாய் பள்ளிகள் உள்ளன.

அத்துடன், திருப்பூரில் உள்ள பலரும், பொறுப்புகளில் உள்ளவர்களும் இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் என்பதால், ஒவ்வொரு ஆண்டும் இப்பள்ளியின் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பலரும் உற்றுநோக்கி பார்க்கின்றனர். கடந்த, 20ம் தேதி வெளியான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில், முந்தைய ஆண்டை விட பள்ளிகள் பெற்ற சதவீதம் உயர்ந்துள்ளது.

கே.எஸ்.சி., பள்ளி

கே.எஸ்.சி., அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்தாண்டு, 412 பேர் தேர்வெழுதினர். 64 பேர் தேர்ச்சி பெறவில்லை; தேர்ச்சி சதவீதம், 84.47. நடப்பாண்டு, 385 மாணவர்கள் தேர்வெழுதினர்; 49 பேர் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி சதவீதம், 2.8 உயர்ந்து, 87.27 சதவீதம்.



நஞ்சப்பா பள்ளி நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 2025 ல், 235 பேர் தேர்வெழுதினர்; 55 பேர் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி சதவீதம், 76.60. நடப்பாண்டு, 194 பேர் தேர்வெழுதினர்; 31 பேர் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி சதவீதம் முந்தைய ஆண்டை விட, 7.42 உயர்ந்து, 84.02 சதவீதம்.


பழனியம்மாள் பள்ளி பழனியம்மாள் பள்ளியில், 2025 ல் 389 மாணவியர் தேர்வெழுதி, 17 பேர் தேர்வாகவில்லை. தேர்ச்சி சதவீதம், 95.63. நடப்பாண்டு, 382 மாணவியர் தேர்வெழுதி, 20 பேர் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி சதவீதம், 0.87 சதவீதம் குறைந்து, 94.76 சதவீதமாகியுள்ளது.

ஜெய்வாபாய் பள்ளி கடந்த, 2025ல், ஜெய்வாய் பள்ளியில், 683 மாணவியர் தேர்வெழுதி, 73 பேர் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி சதவீதம், 89.31. இப்போது, 691 மாணவியர் தேர்வெழுதியதில், 55 பேர் தேர்ச்சி பெறவில்லை. முந்தைய ஆண்டை விட, 2.73 சதவீத தேர்ச்சி உயர்ந்து, தற்போது, 92.02 சதவீதம்.

Advertisement