பாகிஸ்தான் பயங்கரவாதி போல் பேசுகிறார்: ராகுலுக்கு பா.ஜ., கண்டனம்
புதுடில்லி: 'பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை துரோகிகள் என விமர்சித்துள்ளது, ராகுலின் அராஜக மனப்பான்மையை காட்டுகிறது' என, பா.ஜ., கண்டனம் தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேசத்தின் ரேபரேலியில் சமீபத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி., யும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல், 'பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா இருவரும் நாட்டை விற்ற துரோகிகள்.
'அரசியலமைப்பு சட்டத்தின் மீதும், தேசிய சின்னங்களின் மீதும் தாக்குதல் நடத்தியவர்கள்' என, குற்றஞ்சாட்டியிருந்தார். இதற்கு பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்துஉள்ளது.
அக்கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபின் தன் சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிரான ராகுலின் கருத்துகள் துரதிருஷ்ட மானவை. இது, ராகுலின் அராஜக மனப்பான்மையை யும், குணநலன்களை யும் தெளிவாக பிரதிபலிக்கிறது.
தேர்தல்களில் அவரது காங்கிரஸ் கட்சி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருவதால் ஏற்பட்ட விரக்தியையும், ஏமாற்றத்தையும் இந்த கருத்துகள் வெளிப்படுத்துகின்றன. ராகுல், தன் சமநிலையை இழந்து வருகிறார்.
ராகுலின் பேச்சு, நாட்டில் உள்ள 140 கோடி மக்களுக்கும் இழைக்கப்பட்ட அவமானம். இதற்காக, நாட்டு மக்களிடம் ராகுல் மன்னிப்பு கோர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜ., செய்தி தொடர்பாளர் பிரதீப் பண்டாரி வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், 'பிரதமர் மோடியின் கீழ், இந்தியா ஒற்றுமையுடன் இருப்பதை கண்டு எரிச்சலும், கோபமும் அடைந்த ஒரு நகர்ப்புற நக்சலின் மொழியை ராகுல் பயன்படுத்தி உள்ளார்.
'அவரின் பேச்சு, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பயன்படுத்தும் மொழி நடையை ஒத்துள்ளது. இந்திய எதிர்ப்பு சக்திகளின் உருவமாக ராகுல் உள்ளார்' என, தெரிவித்து உள்ளார்.
ராகுலின் இரட்டை குடியுயுரிமை சட்டம் இன்னுமா அவர்மீது தகுந்த கடுந்தண்டனை வழங்க உச்ச நீதி மன்றம் காலம் தள்ளி வருகிறது ஏனிப்படி இதே சாதாரண மக்களாக இருந்தால் உச்ச நீதி மன்றம் உடனே தலையிட்டு வழக்கை முடித்திருப்பார்கள் இந்த ஓர வஞ்சனை ராகுலுக்கு மட்டும் ஏனிப்படி உச்ச நீதி மன்றம் அவகாசம் கொடுத்து மவுனமாக இருக்கிறது அவரது பதவியை முதலில் பறிக்க வேண்டும் அதுதான் மற்றவர்களுக்கும் ஒரு பாடமாகும்
Despite losing 99 elections, Rahul Gandhi and the Congress leadership still fail to understand the public mood and continue to run conspiracies against India every single day.
இந்தியக்குடியுரிமை மட்டுமல்லாது மற்ற நாட்டு குடியுரிமையையும் வைத்துக் கொண்டு பல நாடுகளில் கள்ளத்தனமாக சம்பாதித்துக்கொண்டு, வரி ஏய்ப்பும் செய்யும் ஒருவரை பாராளுமன்ற உறுப்பினராகவும் விட்டு வைத்திருப்பது வெட்கக்கேடானது.மேலும்
-
சிமெண்ட் காரை பெயர்ந்து மூதாட்டி காயம்
-
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆல்பா பள்ளி சாதனை 27வது ஆண்டாக 100 சதவீத தேர்ச்சி அளித்து முத்திரை
-
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கடலுார், விழுப்புரம் மாவட்டம்... பின் தங்கியது: ஆண்டுக்காண்டு தேர்ச்சி குறைவதால் பெற்றோர் அதிர்ச்சி
-
கல்வியை உலக தரத்துக்கு உயர்த்த தமிழக முதல்வருக்கு சில பரிந்துரைகள்!
-
வலி நிவாரணி மாத்திரைவைத்திருந்தவர் கைது
-
திருட்டு போன 7 பைக் மீட்புபழங்குற்றவாளிக்கு காப்பு