10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆல்பா பள்ளி சாதனை 27வது ஆண்டாக 100 சதவீத தேர்ச்சி அளித்து முத்திரை
புதுச்சேரி: புதுச்சேரி புதிய பஸ் ஸ்டாண்ட் பின்புறம் அமைந்துள்ள ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், 27வது ஆண்டாக 100 சதவீத தேர்ச்சியை அளித்து சாதனை படைத்துள்ளது.
பள்ளியின் இயக்குனர் தனதியாகு அளித்த பேட்டி:
பத்தா ம் வகுப்பு பொதுத் தேர்வில் எங்கள் பள்ளி மாணவர் பிரியதர்ஷன் 500க்கு 494 மதிப்பெண் பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். மாணவர் அரவிந்தன் 493 மதிப்பெண், மாணவி சுஜித்ரா 490 மதிப்பெண் பெற்று பள்ளியில் சிறப்பிடம் பெற்றுள்ளனர். 21 மாணவர்கள் 475 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்துள்ளனர்.
மருத்துவம் படிக்கும் மாணவர்கள் எங்கள் பள்ளியில் படித்த மாணவர்கள் ஜிப்மர் மருத்துவமனையிலும், புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லுாரியிலும் படித்து வருகின்றனர். தனியார் மருத்துவக் கல்லுாரிகளிலும் கணிசமான எண்ணிக்கையி ல் படிக்கின்றனர்.
மருத்துவம், இன்ஜினியரிங், கலை உள்ளிட்ட பல்வேறு கல்லுாரிகளில் படித்த எங்களது மாணவர்கள் அரசிலும், தனியாரிலும் உயர் பொறுப்புகளில் இருப்பது மகிழ்ச்சி தருகிறது.
வெளிநாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு எங்கள் நிறுவனத்தின் ஆல்பா இன்ஜினியரிங் மற்றும் கலை அறிவியல் கல்லுாரி, புதுச்சேரி மற்றும் கடலுார் மாவட்ட எல்லையில், கன்னியக்கோவில் - பாகூர் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது.
இங்கு படித்த மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்களிலும், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பெரு நகரங்களில் உள்ள ஐ.டி., கம்பெனிகளிலும் நல்ல சம்பளத்தில் பணியாற்றி பள்ளிக்கு பெருமை சேர்த்து கொண்டுள்ளனர்.
ஆல்பா மெட்ரிக் பள்ளியிலும், ஆல்பா இன்ஜினியரிங் மற்றும் கலை அறிவியல் கல்லுாரியிலும் சேர்க்கை நடந்து கொண்டுள்ளது' என்றார்.
மேலும்
-
மங்களம் மெட்ரிக் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100 சதவீத தேர்ச்சி
-
சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை
-
எஸ்.டி., ஈடன் மெட்ரிக் பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்று அசத்தல்
-
12 ஆண்டுகளாக 100 சதவீதம் தேர்ச்சி அரசு பள்ளி தொடர் அசத்தல்
-
பெண்ணிடம் சீண்டிய டாக்டர் கைது
-
கிராவல் மண் லாரி கவிழ்ந்து விபத்து லாரி டிரைவர் படுகாயம்