சிமெண்ட் காரை பெயர்ந்து மூதாட்டி காயம்

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் நகராட்சி 14 வது வார்டு திருக்கண்டேஸ்வரம் தோப்பு தெருவில் நகராட்சியின் ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் உள்ளது. இங்கு சீலிங் பெயர்ந்து விழும் அபாயம் குறித்து கவுன்சிலர் செல்வகுமார் நகராட்சி அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் பலனில்லை.இந்நிலையில் நேற்று அதே பகுதியை சேர்ந்த ராஜம்,65; என்பவர் அந்த கழிவறைக்கு சென்றார்.

அப்போது சிமண்ட் காரை பெயர்ந்து ராஜம் தலையில் விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த ராஜம் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisement