காசநோயை ஒழிக்க சித்த மருத்துவத்துடன் கை கோர்ப்பு

சென்னை: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், காசநோயை இல்லாத, இந்தியாவை உருவாக்க, பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.

அதன்படி, ஐ.சி.எம்.ஆர்., - தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம், மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள, மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமம் இணைந்து செயல்படும் வகையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழும தலைமை இயக்குனர் நா.ஜெ.முத்துகுமார், தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் ஸ்ரீநாத் சத்யநாராயணா ஆகியோர், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

பாரம்பரிய சித்த மருத்துவத்தின் வாயிலாக, காசநோய்க்கான மருத்துவ பரிசோதனைகள், மேம்பட்ட புதுமையான மருந்துகள் ஆகியவற்றில், இரு துறை நிபுணர்களும் இணைந்து பணியாற்றுவர் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement