அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம்தங்கமணி ஆதரவாளர் புறக்கணிப்பு

நாமக்கல்:தமிழக சட்டசபை தேர்தல் முடிவு வெளியானதை தொடர்ந்து, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்.,க்கு எதிராக, முன்னாள் அமைச்சர்கள் சிலர் போர்க்கொடி துாக்கினர். இவர்கள் அனைவரும் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டனர்.

இதில், நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க., செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் தங்கமணியும், மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு பதில், நாமக்கல் மாநகர செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான பாஸ்கர் நியமிக்கப்பட்டார்.
இவரது தலைமையில், மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், நாமக்கல்லில் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் பாஸ்கர் தலைமை வகித்தார். அப்போது பேசிய அவர், 'மீண்டும் இ.பி.எஸ்., தலைமையில் ஆட்சி அமையும். அனைவரும் அயராது பாடுபட வேண்டும்' என்றார். கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும், முன்னாள் மாவட்ட செயலாளருமான தங்கமணி ஆதரவாளர்கள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement