கோவிலுக்கு சொந்தமான கடை, வீட்டுக்கு 'சீல்'
கரூர்:நீதிமன்ற உத்தரவின்படி, ஹிந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள், கரூர் கோவிலுக்கு சொந்தமான கடை, வீட்டுக்கு சீல் வைத்தனர்.
கரூர் தாலுகா அலுவலகம் எதிரே ராஜராஜேஸ்வரி, 75, என்பவர் கடை மற்றும் வீட்டை அனுபவித்து வருகிறார். இதனை பாகப்பிரிவினை செய்யும் போது பிரச்னை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையில், கரூர் பசுபதீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடம் என தெரிய வந்ததால், அந்த இடத்தை கையகப்படுத்தி, ஹிந்துசமய அறநிலையத்துறையிடம் ஒப்படைக்குமாறு, கரூர் ஆர்.டி.ஓ.,வுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து கடந்த, 12ம் தேதி வீடு மற்றும் கடையை சீல் வைக்க சென்ற போது, அவர்கள் காலஅவகாசம் கோரினர். அது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில், அவர்களுக்கு காலஅவகாசம் அளிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று கரூர் பசுபதீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் ஆறுமுகம் தலைமையில் கடை, வீட்டை சீல் வைத்து
சென்றனர்.
மேலும்
-
10ம் வகுப்பில் வெற்றி பெற்ற பழங்குடி மாணவர்களுக்கு வாழ்த்து
-
மாநில அளவில் சிறப்பிடம் மாணவனுக்கு பாராட்டு
-
தேர்ச்சி சதவீதம் உயர்த்தி காட்டிய கே.எஸ்.சி. – நஞ்சப்பா பள்ளிகள்
-
விளம்பர செய்தி பி.எஸ்., –––––––– கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., மாணவர்கள் மாவட்ட அளவில் சாதனை
-
மணல் கடத்திய 8 பேர் கைது 8 லாரிகள் பறிமுதல்
-
பாகூர் அருகே கொட்டகை எரிந்து 6 ஆடு, 26 கோழிகள் உயிரிழப்பு