மகள் மாயம்; தாய் புகார்

குளித்தலை : குளித்தலை அடுத்த அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுமதி, 34, விவசாய கூலி தொழிலாளி. இவரது மகள் பிரதீபா, 19, தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.


நேற்று முன்தினம் காலை, 7:30 மணிக்கு கல்லுாரிக்கு சென்றவர், வெகு நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் விசாரித்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. தனது மகளை காணவில்லை என, தாய் சுமதி கொடுத்த புகாரின்படி, லாலாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Advertisement