பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம் விவசாயிகள் உண்ணாவிரதம்
பொங்கலுார், ஜூன் 23–
‘‘தேர்தல் பிரசாரத்தின் போது விவசாயிகளின் அனைத்து பயிர் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என த.வெ.க., உறுதியளித்திருந்தது. தற்போது விஜய் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, கூட்டுறவு கடன் சங்கங்களில் பெறப்பட்ட பயிர் கடன்களுக்கு முழுமையான தள்ளுபடி வழங்கப்படாமல், பகுதியாக மட்டுமே சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இது பெயரளவிலான கடன் தள்ளுபடி மட்டுமே; கடன் சுமையில் தவித்து வரும் சிறு, குறு விவசாயிகளுக்கு எந்தவிதமான பயனும் ஏற்படவில்லை’’ என்று விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றி, அனைத்து பயிர் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க வேளாண்மை பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் பரமசிவம் தலைமையில், திருப்பூர் அருகே விவசாயிகள் காலவரையற்ற உண்ணாவிரதம் மற்றும் தொடர் காத்திருப்பு போராட்டத்தை நேற்று துவக்கினர்.
மாநில கொள்கை பரப்புச் செயலாளர் கிருஷ்ணவேணி, திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன், மேற்கு மாவட்ட செயலாளர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர். மேலும், கூட்டுறவு பயிர் கடன் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், பல்வேறு விவசாய சங்க நிர்வாகிகள், விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.
––
படம் 3 காலம்
––––
பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்ய தமிழக அரசை வலியுறுத்தி அவிநாசிபாளையத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் நேற்று உண்ணாவிரதப்போராட்டம் துவங்கியது. இதில் விவசாயிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
மேலும்
-
புதுச்சேரி கிராம வாங்கி சர்வதேச யோகா தினம்
-
புதுச்சேரியில் தேசிய பாரம்பரிய நடன விழா பாரம்பரிய கலைகள் சங்கமத்தால் உற்சாகம்
-
வரதராஜப் பெருமாள் கோவில் கும்பாபிேஷகம்
-
இலவச மனைப்பட்டா கேட்டு கிராம மக்கள் உண்ணாவிரதம்
-
நெய்வேலி வழியாக சென்னைக்கு ரயில்கள் இயக்கப்படுமா?: 10 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் எதிர்பார்ப்பு
-
சத்துணவு ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்