ரோட்டோர தடுப்பில் மோதிய மினிவேன்: நால்வர் காயம்

நத்தம், ஜூன் 23

திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்தவர் முருகேஸ்வரி 48. இவர் நேற்று தனது உறவினர்கள் 4 பேருடன் மினிவேனில் நத்தம் அருகே ஒத்தக்கடையில் உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்று விட்டு மீண்டும் ஊர் திரும்பினர். வேனை விக்னேஷ் 21, ஓட்டிச்சென்றார்.

நத்தம் அருகே துவரங்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் புதுப்பட்டி பிரிவில் வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் ரோட்டோர தடுப்பில் மோதியது. டிரைவர் விக்னேஷ், முருகேஸ்வரி, அவரது உறவினர்கள் பானுமதி 43, சித்தார்த் 13, ஆகிய 4 பேரும் காயம் அடைந்தனர்.

நத்தம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றதும் மேல்சிகிச்சைக்காக மணப்பாறை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement