ரோடுகளில் மாடுகள் நடமாட்டத்தால் விபத்து
திருப்புத்துார்,ஜூன் 23-
திருப்புத்துார் நெடுஞ்சாலைகளில் மாடுகள் நடமாட்டத்தால் ஏற்படும் விபத்துக்களைத் தடுக்க வாகன ஓட்டிகள் கோரியுள்ளனர்.
திருப்புத்துார் சாலைகளில் மாடுகள் நடமாட்டம் அதிகம் காணப்படுகிறது.
குறிப்பாக கோட்டையிருப்பு மதுரை ரோடு, ஜெயமங்கலம் புதுக்கோட்டை ரோடு, கும்மங்குடிப்பட்டி காரைக்குடி ரோடு, காட்டாம்பூர் சிவகங்கை ரோடு பகுதிகளில் மாடுகள் மேய்ச்சலுக்கு செல்லும் போது குறுக்கிடுவதை அடிக்கடி காண முடிகிறது. பாரம்பரியமாக மேய்ச்சலுக்கு கால்நடைகள் செல்லும் வழியில் இந்த ரோடுகள் உள்ளதால் அப்பகுதியில் மாடுகள் குறுக்கீடு அதிகமாக காணப்படும்.
முன்பு குறுகிய ரோடுகளாக இருந்ததால் எளிதாக கடந்து சென்றன. தற்போது ரோடுகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதால் ரோட்டை மாடுகள் கடக்கும் முன் வாகனங்கள் வந்து விடுவதால் விபத்துக்கள் ஏற்படுகின்றன.
இரவுகளில் ஓய்வெடுக்கும் மாடுகள் மீது டூ வீலர்களில் வருபவர்கள் மோதி விபத்து அதிகரித்துள்ளன. குறிப்பாக சிவஙக்கை ரோட்டில் மாடுகளால் அதிகமான விபத்துக்கள் நடக்கின்றன. இதை் தவிர்க்க மாடுகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த ஊராட்சி ஒன்றிய மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் கூட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரியுள்ளனர்.
மேலும்
-
தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் முப்பெரும் விழா கொண்டாட்டம்
-
அமைச்சர்களின் மொபைல் எண்களை வெளிப்படையாக அறிவித்ததால் சிக்கல்! புதிய எண் வாங்க நடவடிக்கை
-
முதல்வர் விஜய் பிறந்த நாள் அறுசுவை உணவு வழங்கல்
-
அரசு கலை கல்லுாரியில் சேர மாணவர்களுக்கு அழைப்பு
-
முன்னறிவிப்பின்றி ராஜவாய்க்காலில் நீர் நிறுத்தம்: விவசாயிகள் அதிருப்தி
-
ஊதியம் உயர்த்தி வழங்கக்கோரி சுகாதார பெண் தன்னார்வலர்கள் மனு