எஸ்.டி., ஈடன் மெட்ரிக் பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்று அசத்தல்

சேத்தியாத்தோப்பு: வடலுார் மற்றும் சேத்தி யாத்தோப் பு, எஸ்.டி., ஈடன் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில், 10ம் வகுப்பு தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பாராட்டப்பட்டனர்.

வடலுார் எஸ்.டி., ஈடன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த பள்ளியை சேர்ந்த மாணவிகள் ஸ்ரீநிதி, 494 மதிப்பெண்கள்; ஷிவானி, 491 மதிப்பெண்கள்; சக்திஅபிராமி 490 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மேலும், 450க்கு மேல், 83 மாணவர்களும், 400க்கு மேல் 171 மாணவர்களும் மதிப்பெண் பெற்றுள்ளனர்.

அதேபோல, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தபட்டுள்ள, சேத்தியாத்தோப்பு, எஸ்.டி.,ஈடன் பள்ளியிலும் மாணவர்கள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பள்ளியின் முதல்வர் சுகிர்தா தாமஸ் மற்றும் நிர்வாக இயக்குநர் தீபக் தாமஸ் ஆகியோர் மாணவர்களுக்கு பொன்னாடை போர்த்தியும் கேடயம் வழங்கியும் பாராட்டினார்.

மேலும் ஆசிரியர்களையும் அவர் பாராட்டினார்.

Advertisement