பாலியல் புகார் கொடுக்க வந்த பெண் அலைக்கழிப்பு; போலீசார் 5 பேர் சஸ்பெண்ட்
தேவகோட்டை: பாலியல் புகார் கொடுக்க வந்த பெண்ணை ஸ்டேஷன்கள் மாறி மாறி அலைகழித்து மன உளைச்சலை ஏற்படுத்தியதாக இன்ஸ்பெக்டர்கள் உட்பட 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் ஆட்டோ டிரைவர் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளிக்க போலீஸ் ஸ்டேஷன் சென்றுள்ளார். அங்கு பணியில் இருந்த போலீசார் ஏதும் கண்டுகொள்ளவில்லை. இது குறித்து வழக்குப்பதிவு செய்யாமல் அலைக்கழித்து இருக்கின்றனர்.
தற்போது பாலியல் புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்காத இன்ஸ்பெக்டர்கள் துரைராஜ், கீதாலட்சுமி உட்பட இரு பெண் சிறப்பு எஸ்.ஐ. , தனிப்பிரிவு ஏட்டு உட்பட ஐந்து பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கடந்த மே 18ம் தேதி புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்காத காரணத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து (4)
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
22 மே,2026 - 14:19 Report Abuse
புதிய கட்சி, புதிய முதல்வர், புதிய அமைச்சர்கள், புதிய அதிகாரிகள். ஆனால் பழைய அவலங்கள் தொடர்கின்றனவே. இதற்குத்தான் மக்கள் ஒரு புதிய கட்சியை ஆட்சியில் அமர்த்தினார்களா...? புதிய முதல்வரே, நீங்கள், உங்கள் கட்சி முழு ஆட்சிக்காலத்திலும் இருக்கவேண்டுமென்றால், ஒரு சில விஷயங்களில் உங்களின் தனி அதிகாரம் இருக்கவேண்டும். அவலங்கள் உடனுக்குடன் தீர்க்கப்படவேண்டும். செய்வீர்களா... 0
0
Reply
sengalipuram - ,இந்தியா
22 மே,2026 - 13:50 Report Abuse
திராவிட மாடல் நடை முறை மாற தொடங்கியிருக்கு .. அரசாங்கத்தில் பணி செய்வோர் இன்னும் அந்த திராவிட சிந்தனில் தொடர்ந்தால் அன்றாட ஆட்சியில் பல சிக்கல் வரும் . உடனுக்குடன் தங்கள் பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் . இதே வேகம் 5 வருடமும் தொடரவேண்டும் . 0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
22 மே,2026 - 12:28 Report Abuse
புதிய கட்சி, புதிய முதல்வர், புதிய அமைச்சர்கள், புதிய அதிகாரிகள். ஆனால் பழைய அவலங்கள் தொடர்கின்றனவே. இதற்குத்தான் மக்கள் ஒரு புதிய கட்சியை ஆட்சியில் அமர்த்தினார்களா...? புதிய முதல்வரே, நீங்கள், உங்கள் கட்சி முழு ஆட்சிக்காலத்திலும் இருக்கவேண்டுமென்றால், ஒரு சில விஷயங்களில் உங்களின் தனி அதிகாரம் இருக்கவேண்டும். அவலங்கள் உடனுக்குடன் தீர்க்கப்படவேண்டும். செய்வீர்களா... 0
0
Reply
தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU,இந்தியா
22 மே,2026 - 12:25 Report Abuse
பொதுவா ஆட்டோ டிரைவர்கள் கழகக் கண்மணிகளே .... 0
0
Reply
மேலும்
-
கடலாடியில் இரவு நேர டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதி திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் புதிய கட்டடம்
-
ஐ.டி.ஐ.,வளாகத்தேர்வு
-
விலை கிடைப்பதால் திராட்சை வாழை சாகுபடி பரப்பு அதிகரிப்பு
-
சூரிய, காற்றாலை மின் உற்பத்தி திறன் அதிகரிப்பு; மோடி தலைமைக்கு கமல் பாராட்டு
-
பெண்களை இழிவுபடுத்தி திமுக எம்பி ஆ.ராஜா சர்ச்சை பதிவு; குவியும் கண்டனங்கள்
-
60 நாட்களில் மிகப்பெரிய நிர்வாக மாற்றம்; சொல்கிறார் அமைச்சர் ஆதவ்
Advertisement
Advertisement