பிளஸ்1 வகுப்பில் சேருவதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
புதுச்சேரி: பிளஸ்1 வகுப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் இன்று 21ம் தேதி முதல் வழங்கப்படுகின்றது.
இது குறித்து பள்ளி கல்வித் துறை இணை இயக்குநர் சிவகாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
2026--27ம் ஆண்டில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் இன்று 21ம் தேதி முதல் வழங்கப்படுகின்றது.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்று இதுவரை விண்ணப்பிக்காத அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இரண்டாம் கட்டமாகவும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் ஏனைய பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற மாணவ மாணவிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் 27ம் தேதிக்குள் அந்தந்த அரசு மேல்நிலைப் பள்ளிகளில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
மாணவர்கள் ஒன்றிற்கும் மேற்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில் விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை அந்தந்த பள்ளிகளில் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
அதிகரிக்கும் கோடை வெயில் வறட்சியில் கால்நடைகள் தவிப்பு
-
திருப்புவனத்தில் மாடுகள் தொல்லை மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை
-
சட்டவிரோத ஊடுருவல்காரர்கள் இந்தியாவிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்: அமித்ஷா உறுதி
-
மதம் மாற்றப்பட்டு ஏமாற்றப்பட்ட பெண்ணுக்கு அநீதி; அத்துமீறிய போலீசுக்கு சரியான தண்டனை
-
288 பேரை உயிர்பலி வாங்கிய விபத்து; விமான நிறுவனங்களுக்கு ரூ.720 கோடி அபராதம் விதிப்பு
-
பிரதமர் மோடி - சைப்ரஸ் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடோலிடிஸ் சந்திப்பு