துாய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் துாய்மை பணியாளர்கள் போராட்டம்

பாரிமுனை: பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, துாய்மை பணியாளர்கள் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே, நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

துாய்மை பணியாளர்களின் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

துாய்மை பணியாளர்கள் நடத்திய போராட்டத்தின்போது, பதியப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, உழைப்போர் உரிமை இயக்கத்தின் சார்பில் 500க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பணி நிரந்தரம் செய்யக் கோரி, மாநகராட்சி ஒப்பந்த துாய்மை பணியாளர்கள்,சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே, நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இடம்: ராஜாஜி சாலை, பாரிமுனை.

Advertisement