தி.மு.க., செயற்குழு கூட்டம்
புதுச்சேரி: புதுச்சேரி மாநில தி.மு.க., செயற்குழுக் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள ஜெயராம் திருமண மண்டபத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு மாநில அவைத் தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். துணை அமைப்பாளர்கள் அனிபால் கென்னடி, தைரியநாதன், குமார், மாநில பொருளாளர் செந்தில்குமார், எம்.எல்.ஏ., மாநில இளைஞர் அணி அமைப்பாளர் சம்பத் முன்னிலை வகித்தனர். தி.மு.க., அமைப்பாளர் சிவா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் தி.மு.க., இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தமிழக எதிர்கட்சி தலைவராக தேர்வு செய்து பணியாற்றிட வாய்ப்பு வழங்கி, தமிழ்நாடு சட்டசபையில் எழுச்சி உரையாற்றி நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ள நமது இளம்தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு இக்கூட்டம் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.
புதுச்சேரியில் காலாப்பட்டு, ராஜ்பவன், உருளையன்பேட்டை, உப்பளம், முதலியார்பேட்டை, வில்லியனூர், மங்கலம், திருபுவனை, கதிர்காமம், நெல்லித்தோப்பு, பாகூர், காரைக்கால் தெற்கு, நிரவி டி.ஆர்.பட்டினம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்ட தி.மு.க., வேட்பாளர்கள் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தி.மு.க., தலைவருக்கும், தமிழ்நாடு சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கும் ஜெகத்ரட்சகன் எம்.பி.,க்கும் நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மேலும்
-
ஜூன் 18ல் ராஜ்யசபா இடைத்தேர்தல்; தவெகவுக்கு ஜாக்பாட்
-
முதல்வர் விஜய் அமைச்சரவை விரிவாக்கம்; விசிக, முஸ்லிம் லீக் அமைச்சர்கள் பதவியேற்பு
-
ஹோண்டுராஸில் இரு இடங்களில் துப்பாக்கிச்சூடு; 6 போலீசார் உள்பட 25 பேர் சுட்டுக்கொலை
-
இந்தியாவின் சந்திரயான்-3 திட்டம்; அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் விருது வழங்கி கவுரவிப்பு
-
நாமக்கல் மாவட்டத்திற்கு நான்கு அமைச்சர்
-
கோவைக்கு 2 அமைச்சர்களை தந்து முதல்வர் விஜய் அதிர்ச்சி வைத்தியம்; வேலுமணியின் அமைச்சராகும் கனவு தவிடுபொடி