வாலாஜாபாதில் நுாலகத்திற்கு சொந்த கட்டடம் தேவை ம.தி.மு.க., செயலர் மனு
காஞ்சிபுரம்: வாலாஜாபாதில் நுாலகத்திற்கு சொந்த கட்டடம் தேவை என, ம.தி.மு.க., செயலர், காஞ்சிபுரம் கலெக்டரிடம் மனு அளித்தார்.
இதுகுறித்து, வாலாஜாபாத் பேரூராட்சி ம.தி.மு.க., செயலர் சிவகுமார் அளித்துள்ள மனுவில் கூறியதாவது:
வாலாஜாபாத் பேரூராட்சியில், 10,000க்கும் மேற்பட்ட மக்கள் மற்றும் அரசு, தனியார் பள்ளிகளில் மாணவ- - மாணவியர் படித்து வருகின்றனர். கல்வி அறிவு மேம்படுத்துவதற்கு, தனி நுாலகம் இயங்கி வந்தது.
அந்த கட்டடம் பழுது ஏற்பட்டு, தற்காலிகமாக அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாக கட்டடத்தில் இயங்கி வருகிறது. பள்ளி வேலை நாட்களில், நுாலகத்திற்கு செல்வதில் தயக்கம் நிலவி வருகிறது.
எனவே, வாலாஜாபாத் நுாலகத்திற்கு சொந்த கட்டட வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பெட்ரோல், டீசல் விற்பனையில் எந்தவித கட்டுப்பாடும் விதிக்கவில்லை; இந்தியன் ஆயில் நிறுவனம் .
-
கார்களின் விலையை ரூ.30 ஆயிரம் உயர்த்துகிறது மாருதி சுசூகி
-
தமிழகத்தில் தகதகக்கும் வெயில்; 16 இடங்களில் அடித்தது சதம்
-
குரு பெயர்ச்சி ஜப ஹோமம்
-
பாதுகாப்பு உபகரணம் இல்லாமல் பணயில் ஈடுபட்ட மின்ஊழியர்கள்
-
பொது பாதை தொடர்பாக தகராறு 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு
Advertisement
Advertisement