அசத்திய 13 பள்ளிகள் சதமடித்து சாதனை
உடுமலை: உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரங்களில், 13 அரசுப்பள்ளிகள், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், நுாறு சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்டன.
நுாறு சதவீதம் பெற்ற பள்ளிகள்: துங்காவி உயர்நிலைப்பள்ளி, ராமச்சந்திராபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, கல்லாபுரம் உயர்நிலைப்பள்ளி, பூலாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளி, உடுக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, சர்க்கார்கண்ணாடிபுத்துார் அரசு உயர்நிலைப்பள்ளி, தேவனுார்புதுார் என்.ஜி.பி., அரசு மேல்நிலைப்பள்ளி, புக்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி, ஆ.அம்மாபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி, உடுமலை அம்மாபட்டி ஆதிதிராவிடர் நலப்பள்ளி, அரசு மாதிரி பள்ளி உடுமலை, ராஜேந்திரா ரோடு அரசு மேல்நிலைப்பள்ளி, திருமூர்த்திநகர் அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகள், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நுாறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
மேலும்
-
பெட்ரோல், டீசல் விற்பனையில் எந்தவித கட்டுப்பாடும் விதிக்கவில்லை; இந்தியன் ஆயில் நிறுவனம் .
-
கார்களின் விலையை ரூ.30 ஆயிரம் உயர்த்துகிறது மாருதி சுசூகி
-
தமிழகத்தில் தகதகக்கும் வெயில்; 16 இடங்களில் அடித்தது சதம்
-
குரு பெயர்ச்சி ஜப ஹோமம்
-
பாதுகாப்பு உபகரணம் இல்லாமல் பணயில் ஈடுபட்ட மின்ஊழியர்கள்
-
பொது பாதை தொடர்பாக தகராறு 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு