ஆற்றில் விளையாடி நீராடும் யானைகள்: முதுமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் 'குஷி'
கூடலுார்: முதுமலை, தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் பகல் நேரங்களில் மாயார் ஆற்றில் விளையாடிய படி நீராடுவதை சுற்றுலா பயணிகள் ரசித்து செல்கின்றனர்.
முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு, அபயாரண்யம் யானைகள் முகாமில் மூன்று குட்டிகள் உட்பட, 27 வளர்ப்பு யானகள் பராமரிக்கப்படுகின்றன.
இங்கு கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது கோடை மழை பெய்தாலும், பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனை சமாளிக்க முடியாமல் வளர்ப்பு யானைகள் சிரமப்பட்டு வருகின்றன.
இவைகளின் உடல் வெப்பத்தை தணிக்க பாகன்கள் மதிய நேரத்தில் மாயாறு ஆற்றுக்கு அழைத்து செல்கின்றனர். அப்போது யானைகள் மாயாறு விளையாடியபடி நீராடி உடல் வெப்பத்தை தணித்து வருகின்றன. இதனை சுற்றுலா பயணிகள் ரசித்து 'போட்டோ' எடுத்து செல்கின்றனர்.
வனத்துறையினர் கூறுகையில்,' இப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் யானைகள் நீராடுவதை பார்க்கலாம். ஆனால், ஆற்றில் இறங்க கூடாது,' என்றனர்.
மேலும்
-
பெட்ரோல், டீசல் விற்பனையில் எந்தவித கட்டுப்பாடும் விதிக்கவில்லை; இந்தியன் ஆயில் நிறுவனம் .
-
கார்களின் விலையை ரூ.30 ஆயிரம் உயர்த்துகிறது மாருதி சுசூகி
-
தமிழகத்தில் தகதகக்கும் வெயில்; 16 இடங்களில் அடித்தது சதம்
-
குரு பெயர்ச்சி ஜப ஹோமம்
-
பாதுகாப்பு உபகரணம் இல்லாமல் பணயில் ஈடுபட்ட மின்ஊழியர்கள்
-
பொது பாதை தொடர்பாக தகராறு 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு