பிரதான் மந்திரியின் பால் புரஸ்கார் விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிரதான் மந்திரியின் பால் புரஸ்கார் விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலமாக பிரதான் மந்திரியின் ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது வழங்கப்படுகிறது.

இந்த விருது தன்னலமற்ற, துணிச்சலான செயல்களில் ஈடுபட்ட திறமையான குழந்தைகளின் திறமைகளை பாராட்டி அங்கீகாரம் அளிப்பதற்காக பிரதான் மந்திரியின் பால் புரஸ்கார் விருது குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.

மேலும் விளையாட்டு, சமூக சேடை, அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் சமூகத்தில் பரவலான மற்றும் வெளிப்படையான தாக்கத்தை ஏற்படுத்திய குழந்தைகளுக்கு அளிக்கப்படுகிறது.

மேலும் இவ்விருதினை பெறுவதற்கு, இந்திய குடிமகனாக மற்றும் இந்தியாவில் வசிக்கும் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தினை https://awards.gov.in என்ற ஆன்லைன் போர்ட்டலில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இவ்விருதுக்கான விண்ணப்பத்தினை குழந்தையோ அல்லது குழந்தையின் பெற்றோரோ, ஆசிரியர் மற்றும் அலுவலர்கள் மூலம் பரிந்துரைக்கலாம்.

இவ்விருது 2026–ஆம் ஆண்டிற்கான விருதிற்கான விண்ணப்பத்தினை வரும் ஜூலை 31க்குள் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement